Modeling To IAS ஆன மக்களவை சபாநாயகரின் மகள்.., இவரை பற்றி பரவும் சர்ச்சை கருத்து
முதல் முயற்சியிலே தேர்வில் வெற்றி பெற்ற இந்திய மக்களவை சபாநாயகரின் மகளை சுற்றி சர்ச்சையான கருத்துக்கள் பரவி வருகிறது.
மக்களவை சபாநாயகர்
மக்களவை தலைவர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷும் போட்டியிட்டனர். இதில், கே.சுரேஷ் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜுன் 24-ம் தேதி கூடிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் தற்காலிக மக்களவைத் தலைவராக கே.சுரேஷை தேர்ந்தெடுக்காதது தான் எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்தது.
மேலும், துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கோரியது. இதில், இருவருக்கும் ஒருமித்த கருத்து வராததால் இப்பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிக வாக்குகளை பெற்ற ஓம் பிர்லா 18-வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்தவர் ஓம் பிர்லா. இவர் கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
பின்னர், கடந்த 2014 -ம் ஆண்டு தேர்தலில் கோட்டா தொகுதியின் எம்.பியாக நாடாளுமன்றம் சென்றார். இவருக்கு கடந்த 1991 -ம் ஆண்டு அமிதா பிர்லா என்பவரும் திருமணம் நடைபெற்று 2 மகள்கள் உள்ளனர்.
IAS ஆன மகள்
இதில் இளைய மகளான அஞ்சலி பிர்லா கடந்த 2019 -ம் ஆண்டில் தன்னுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். பின்னர் தொடர்ந்து அகாடமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன இவர் தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து பேசிய அஞ்சலி பிர்லா, "எனது தந்தையின் பொதுசேவை தான் சிவில் சர்வீஸ் எழுத உந்துசக்தியாக இருந்தது. நாட்டு மக்களுக்கு தனது தந்தை செய்து வரும் சேவையை போல மக்களுக்கு எதாவது செய்ய விரும்புகிறேன்" என்றார்.
இவர் ஐஏஎஸ் ஆவதற்கு முன்பு மாடலிங் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில், இவர் தேர்வு எழுதாமல் தான் ஐஏஎஸ் ஆனதாக சமுக வலைதளங்களில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |