பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ 100 கோடி செலுத்த வேண்டும்: நீரவ் மோடிக்கு உத்தரவிட்ட லண்டன் நீதிமன்றம்
குஜராத் தொழிலதிபர் நீரவ் மோடி பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி செலுத்த கடமைப்பட்டவர் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற நீரவ் மோடி
குஜராத்தை சேர்ந்த வைர வியாபார தொழிலதிபர் நீரவ் மோடி, இந்தியாவில் உள்ள வங்கிகளிடம் இருந்து அதிக கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார்.
தற்போது 55 வயதான நீரவ் மோடி லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து கிட்டத்தட்ட 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பேங்க் ஆஃப் இந்தியாவில் வாங்கிய கடன் குறித்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இந்நிலையில் பேங்க் ஆஃப் இந்தியா வழக்கு தொடர்பான தீர்ப்பை லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியது. அந்த தீர்ப்பில், தன்னுடைய நிறுவனங்களில் ஒன்று வாங்கிய கடனுக்கு நீரவ் மோடி வழங்கிய தனிநபர் உத்தரவாதத்தின் மீது நீரவ் மோடி பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு 10.7 மில்லியன் டொலர் (100 கோடி ரூபாய்க்கும் மேல்) செலுத்த கடமைப்பட்டுள்ளார் என உத்தரவிட்டுள்ளது.
வங்கிக்கு செலுத்த வேண்டிய அசல் தொலையான 4.1 மில்லியன் டொலர் அதன் வட்டி ஆகியவற்றை நீரவ் மோடி தனிப்பட்ட முறையில் செலுத்த கடமைப்பட்டுள்ளார் என்று நீதிபதி சைமன் டிங்க்லர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |