டயானா சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட ஹரி... நடந்த அசம்பாவிதம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது தாயாரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து லண்டன் புறப்படும் அதேநேரத்தில், ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது.
ஜூலை மாதம் 1ஆம் திகதி, இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை ஒன்றை திறந்து வைப்பது என இளவரசர்கள் ஹரியும் அவரது அண்ணன் வில்லியமும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக, லண்டன் செல்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு வந்தார் இளவரசர் ஹரி.
அப்போது அந்த பகுதியில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்தது. வேகமாக வந்த கார் ஒன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் வேலியை உடைத்துக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தது.
உடனே, சுமார் 20 கார்களில் விரைந்த பொலிசார், அந்த காரை துரத்தி, விமான
ஓடுதளம் ஒன்றின் அருகே சுற்றி வளைத்தனர்.
இதனால் இரண்டு விமான ஓடுதளங்கள் மூடப்பட்டன. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று மட்டும் தெரிவித்துள்ள பொலிசார், சம்பவத்தில் ஈடுபட்டவர் யார், எதற்காக அவர் விமான நிலையத்துக்குள் நுழைந்தார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணை தொடர்கிறது.