லண்டனில் இந்தியர்களை நோக்கி பாகிஸ்தான் அதிகாரி கொடுத்த சைகை., சர்ச்சையாகும் காணொளி
லண்டனில் அமைதிப் போராட்டம் நடத்திய இந்தியர்களை நோக்கி பாகிஸ்தான் அதிகாரி கொடுத்த சைகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளினர் அமைதியான போராட்டம் நடத்தினர்.
அப்போது பாகிஸ்தான் இராணுவ அதிகாரி தைமூர் ரஹத் என்பவர், போராட்டக்காரர்களை நோக்கி கழுத்தை அறுத்துவிடுவேன் என்பது போல சைகை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதியின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் யூத சமூகத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் இந்தியக் கொடிகளை தூக்கி, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை எதிர்த்து முழக்கமிட்டனர்.
A senior staff of Pakistan High Commission, London was seen threatening to slit throat of peaceful protesters.
— Cyber Huntss (@Cyber_Huntss) April 26, 2025
The Terror mindset of Pakistan is yet Again exposed.#पहलगाम_आतंकी_हमला #पहलगाम_हिंदू_नरसंहार pic.twitter.com/qZqR1rysCy
ஆர்ப்பாட்டத்தின்போது பாகிஸ்தான் தூதரகம் கொண்டாட்ட இசையை உரக்க ஒலிக்கசெய்தது என்றும், இது "இனவெறி மற்றும் மரியாதையற்ற செயல்" என போராட்ட ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய அரசு 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்வழி ஒப்பந்தத்தை நிறுத்தி, அட்டாரி நில எல்லையை மூடியும், மே 1க்குள் பாகிஸ்தான் குடிமக்களை நாடு திரும்பிச் செல்ல உத்தரவிட்டது. இரு நாடுகளின் தூதரகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan High Commission London.Pahalgam terror attack. Taimur Rahat gesture, Indian diaspora protest UK, Indo-Jewish solidarity protest, India Pakistan diplomatic tensions, Indus Waters Treaty suspended, Attari border closed, Islamist radicalisation protest, Jammu Kashmir civilian deaths