லண்டன் கொதித்துக் கொண்டிருக்கிறது: உலக தலைவர்களுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் வேண்டுகோள்
லண்டன் கொதித்துக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
லண்டன் கொதித்துக் கொண்டிருக்கிறது
உலக அளவில் மாறி வரும் காலநிலை மாற்றம் மற்றும் லண்டனில் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், லண்டன் வெப்ப நிலையை சுட்டிக்காட்டி லண்டன் தற்போது “கொதித்துக் கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.
லண்டனில் நடைபெற்ற லண்டன் காலநிலை மாற்ற வார நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் புகழ்பெற்ற எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸின் A Tale of Two Cities என்ற நாவலை குறிப்பிட்டு, உலகம் தற்போது இரண்டு வகையான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
முதலாவதாக, அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக உலகம் பேரழிவை நோக்கி நகர்ந்து வருவதாக எச்சரித்தார்.
இரண்டாவதாக, புதைப்படி பொருட்களை நம்பி இருக்கும் உலக நாடுகளின் பலவீனமான தன்மையை சுட்டிக்காட்டினார்.
புதைபடிவ எரிபொருள் மீதான பிடியை தளர்த்த வேண்டும்
1976 ஆண்டுக்கு பிறகு அதிகப்படியான வெப்ப நிலையை லண்டன் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக தலைவர்களுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் குட்டரெஸ் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில் ஹைட்ரோகார்பன் எரிபொருட்களின் பயன்பாட்டை உலக நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும், அதனை தொடர்ந்து ஊக்குவிப்பது என்பது நம்முடைய சுற்றுச்சூழல் சீரழிவை நாமே ஊக்குவிப்பதாக அமையும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை விட்டுவிட்டு நிலையான மாற்று எரிசக்தியை நோக்கி நகர வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |