லண்டனில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்! நடந்தது என்ன? வெளியான கடைசி நிமிட வீடியோ காட்சி
லண்டனில் கென்சிங்டன் அரண்மனை அருகே பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், தற்போது அந்த இடத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதன் பின் அங்கிருந்து வெளியேறிய அவர், காரில் சென்ற போது, இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அடுத்த 15 நிமிடங்களுக்குள் அந்த நபரை Kensington சாலை மற்றும் அரண்மனை கேட் சந்திப்பில் இருப்பதைக் கண்டுபிடித்தி, தடுத்து நிறுத்தி, அதன் பின் சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளனர்.
அதில் பெயர் தெரிவிக்க விரும்பாத நபர் கூறுகையில், காரின் உள்ளே இருந்த நபர் ஒருவர் பொலிசாரால் சுடப்பட்டார். அதன் பின் அவர் மீது கைவிலங்கிட்டனர். அப்போது அவருடைய வாயில் இரத்தம் வடிவதை பார்க்க முடிந்தது. மூச்சுவிட முடியாமல் தவிப்பது போல் இருந்தாக கூறினார்.
பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நபர், அன்றைய தினம் நான் சாலையில் உள்ள பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, மெர்சிடிஸ் டாக்ஸியில் இருந்து ஒருவர் இழுப்பதை பார்க்க முடிந்தது.
அப்பகுதி வழியே காரில் சென்ற நபர், நான் அந்த வழியே கார் ஓட்டிச் சென்றேன். பொலிசார் அப்போது ஒரு கருப்பு நிற காரை சுற்றி வளைத்து நின்றனர். அதன் பின் நான் அங்கிருந்து சென்ற மூன்று அல்லது நான்கு வினாடிகளுக்குள் இரண்டோ அல்லது மூன்று முறையோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக குறிபிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் இருந்த நபர் கூறுகையில், கருப்பு வண்டியில் இருந்து ஒரு நபரை பொலிசார் வெலியில் இழுத்து கைது செய்ய முற்பட்டனர்.
ஆரம்பத்தில் அவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார். பொலிசார் அவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து மூச்சுவிடுவதில் சிரமப்பட்டாதால், அவருக்கு CPR செய்து காப்பாற்ற போராடியதாக குறிப்பிட்டார்.
IOPC(Independent Office for Police Conduct), இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சனிக்கிழமை Kensington-ல் Marloes சாலையில் துப்பாக்கியுடன் ஒரு நபர் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.
அதன் பின் பொலிசார் விரைந்து சென்று பிடிக்க முற்பட்ட போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை அழைக்கப்பட்டது.
ஆனால் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.