லண்டனில் பள்ளி மீது மோதிய லேண்ட் ரோவர் கார்: மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
மேற்கு லண்டனின் விம்பிள்டன் பகுதியில் லேண்ட் ரோவர் கார் ஒன்று பள்ளி கட்டிடத்தில் மோதி விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பள்ளி கட்டிடம் மீது மோதிய கார்
தென்மேற்கு லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கேம் சாலையில் அமைந்துள்ள தொடக்க பள்ளி மீது லேண்ட் ரோவர் கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளி கட்டிடம் மீது கார் மோதியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு முன்னதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
MyLondon
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சில நபர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதில் 7 பள்ளி சிறுவர்கள் மற்றும் 2 பெரியவர்கள் என 9 பேர் காயமடைந்து இருப்பதாக மெட் பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த 2 தீயணைப்பு மீட்பு குழுக்கள்
இந்த கார் மோதல் விபத்தை தொடர்ந்து 2 தீயணைப்பு படை பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
PA
இது தொடர்பாக லண்டன் தீயணைப்பு படை வழங்கியுள்ள தகவலில், விபத்து ஏற்பட்ட விம்பிள்டன் பள்ளியில் தேவையான அனைத்து அவசர உதவிகளையும் செய்து வருவதாகவும், இரண்டு தீயணைப்பு படை குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் கூடுதல் புதுப்பிப்புகளுக்கு தொடர்ந்து லங்காசிறி-யுடன் இணைந்து இருக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |