லண்டனை உலுக்கிய இரட்டை கத்திக்குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது பாய்ந்த வழக்குகள்
வடக்கு லண்டன் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் மற்றும் 23 வயதுடைய இளைஞர் என இருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏபெல் சுண்டா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்
பிரித்தானியாவின் ஹைகேட் ஹில் பகுதியை சேர்ந்த ஏபெல் சுண்டா (Abel Chunda) என்ற 27 வயதுடைய ஆண் ஒருவர், 15 வயதுடைய சிறுவன் மற்றும் 23 வயதுடைய இளைஞர் என இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வடக்கு லண்டனின் ஆர்ச்வேயில் உள்ள எல்தோர்ன் சாலையில் நடந்த குற்றச் சம்பவத்தில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்த குற்றத்திற்காக ஏபெல் சுண்டா மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sky News
புதன்கிழமைக்கு பிறகு ஹைபரி கார்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஏபெல் சுண்டா-வை பொலிஸார் காவலில் வைத்துள்ளனர்.
கத்திக்குத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
ஜூன் 29ம் திகதி வியாழக்கிழமை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இரவு 11.33 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 வயது சிறுவன் லியோனார்டோ ரீட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பெயர் வெளியிடப்படாத 23 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மூன்றாவதாக 28 வயதுடைய நபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Pic: Met Police
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |