பிரித்தானிய சாலையில் இளைஞருக்கு நடந்த பரிதாபம்: விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை!
பிரித்தானியாவின் ஹாரிங்கி பகுதியில் இரவு 9:30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 20 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஹாரிங்கி (Haringey) பகுதியில் உள்ள உயர் சாலையில்( High Road) ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பிரித்தானிய காவல்துறை மற்றும் லண்டன் அவசர சேவை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லண்டன் அவசர கால சேவை குழு, துப்பாக்கியால் சுடப்பட்டு காயப்பட்ட 20 வயது நபருக்கு தேவையான முதலுதவி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இருப்பினும் படுகாயம் அடைந்த 20 வயது மதிக்கதக்க அந்த அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் அறிவித்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், அதுவரை ஹை ரோடு ( High Road) போக்குவரத்துக்கு மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: Monkeypox தொற்றிலிருந்து வேகமாக மீள வேண்டுமா? கட்டாயம் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.