லண்டன் நகரில் பதறவைக்கும் சம்பவம்... காதலனால் 18 முறை: இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்
கிழக்கு லண்டனில் முன்னாள் காதலியை ஏமாற்றி சந்திக்க வைத்து, கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற நபருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை அறிவித்துள்ளது.
ஏமாற்றி அழைத்த காதலன்
கிழக்கு லண்டனை சேர்ந்த 28 வயது ராபின் இப்ராஹிம் என்பவரே கடந்த 2021 ஜூன் மாதம் தமது முன்னாள் காதலியை தொடர்புகொண்டு, கடனை திருப்பித் தரவேண்டும் என ஏமாற்றி அழைத்தவர்.
Image: Met Police
இதனை நம்பிய அந்த பெண்மணியும், ராபின் இப்ராஹிம் குறிப்பிட்ட வங்கி அருகாமையில் சென்றுள்ளார். ஆனால் வங்கி செயல்படும் நேரத்தை ராபின் இப்ராஹிம் தவறவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் குறித்த பெண்ணின் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி, ராபின் இப்ராஹிம் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து தரையில் சரிந்த அந்த பெண்ணை ராபின் இப்ராஹிம் 18 முறை கத்தியால் தாக்கியுள்ளார். ஆனால், அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு, இந்த தாக்குதலில் இருந்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
பொலிசாரால் கைது
இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். பொதுமக்கள் உதவியுடன் ராபின் இப்ராஹிம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராபின் இப்ராஹிம், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமான நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, பொதுவெளியில் ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தியது, கொலை முயற்சி உள்ளிட்ட உற்றங்களுக்காக 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாசில்டன் கிரவுன் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.