லண்டனின் புத்தாண்டு தின இரவு வாணவேடிக்கை உறுதி: கொண்டாட்டங்களை உறுதிப்படுத்திய மேயர்
லண்டனின் புகழ்பெற்ற புத்தாண்டு தின இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வலுவான காற்று அச்சுறுத்தல் இருந்தாலும், லண்டனின் பிரபலமான புத்தாண்டு தின இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நள்ளிரவில் நடைபெறும் என்று லண்டன் மேயர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை வரவேற்கும் வகையில் "தேம்ஸ் நதிக்கரையில் இருந்து அற்புதமான வாணவேடிக்கை காட்சிகள்” காத்திருப்பதாக லண்டன் மேயர் உறுதியளித்துள்ளார்.
தேம்ஸ் நதிக்கரையில் வாணவேடிக்கையை பார்வையிடும் பகுதிகளுக்கு செல்வதற்கான டிக்கெட் இல்லாதவர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்க்க அல்லது தலைநகரின் பல்வேறு விருந்தோம்பல் தளங்களில் 2025-ஐ வரவேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் காற்று எச்சரிக்கை
புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 00:15 GMT முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லண்டனுக்கு மஞ்சள் காற்று எச்சரிக்கையை மெட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
நள்ளிரவில் தென்மேற்கிலிருந்து வலுவான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எச்சரிக்கை பிற்பகல் 15:00 GMT வரை நீடிக்கும், அதாவது நாள் முழுவதும் வலுவான காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |