லண்டனில் ஒரே மாதத்தில் 7 பெண்களை பின் தொடர்ந்து அருவருப்பான செயலை செய்த நபர்! புகைப்படம் வெளியானது
லண்டனில் ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சைக்கிளை ஓட்டி கொண்டு, தான் குறிவைக்கும் பெண்களுக்கு பின்னால் வந்தே இச்செயலில் அவன் ஈடுபட்டிருக்கிறான். பொலிசார் கூறுகையில், இதில் பெரும்பாலான சம்பவங்கள் டவர் ஹெம்லெட்ஸ் பகுதியில் தான் கடந்த ஆகஸ்ட் 30ல் இருந்து செப்டம்பர் 29ஆம் திகதி வரை நடந்துள்ளது.
அதில் நான்கு முறை பெண்களுக்கு முன்னால் சுய இன்பம் அனுபவித்துள்ளான் குற்றவாளி. அவன் கருப்பு மற்றும் சாம்பல் நிறை சைக்கிளில் வந்தான் என கூறியுள்ள பொலிசார் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான் எனவும் கூறியுள்ளனர்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து அடையாளம் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.