லண்டனில் ஆர்ப்பாட்டம்... ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிப்பு
தலைநகர் லண்டனில் இரு போட்டிப் போராட்டங்களுக்காக மக்கள் கூடத் தொடங்கியுள்ள நிலையில், 4,000-க்கும் மேற்பட்ட பொலிசார் சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவச வாகனங்கள் தயார்
ட்ரோன்கள், குதிரைப் படை மற்றும் நாய்களையும் பொலிஸ் தரப்பு பயன்படுத்த உள்ளது. மட்டுமின்றி, கவச வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பல ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான காவல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என பெருநகர காவல்துறை கூறியுள்ளது. போராட்டங்கள் மட்டுமின்றி, சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் எஃப்ஏ கிண்ணம் இறுதிப் போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநகர காவல்துறையின் துணை உதவி ஆணையர் ஜேம்ஸ் ஹார்மன் தெரிவிக்கையில், இந்தக் காவல் நடவடிக்கைக்கு 4.5 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்று கூறியுள்ளார்.
மட்டுமின்றி, போராட்டக் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நேரடி முக அடையாளம் காணும் கமெராக்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட உள்ளது. யூஸ்டன் மற்றும் கிங்ஸ் கிராஸ் செயின்ட் பான்கிராஸ் ரயில் நிலையங்களில் நேரடி முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
'Unite the Kingdom' பேரணியில் பங்கேற்பவர்கள் வந்து சேர வாய்ப்புள்ள இடமாகும் இது. போராட்டம் முன்னெடுக்கப்படும் பாதைகள் இரண்டையும் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

வலதுசாரி கிளர்ச்சியாளர்கள்
வெம்ப்லியில் உள்ள அதிகாரிகள், போராட்டங்களை நோக்கிச் செல்லும் ஆதரவாளர்களை அடையாளம் காண்பதற்காக, FA கிண்ணம் இறுதிப் போட்டியின் CCTV காட்சிகளையும் கண்காணிப்பார்கள்.
இதனிடையே, 'யுனைட் தி கிங்டம்' நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, பதினொரு வெளிநாட்டு தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள் நாட்டிற்குள் நுழைவதுத் தடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த ப்தினொரு பேர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த, இஸ்லாமிய எதிர்ப்பு செல்வாக்குடைய வாலண்டினா கோமஸ் என்பவரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற முதல் 'யுனைட் தி கிங்டம்' பேரணியில் இவர் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |