லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட நாய் இறைச்சி: அதிகாரிகள் நடவடிக்கை
லண்டனில் உள்ள வியட்நாமிய உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அது நாய் இறைச்சி
சவுத்வார்க் பகுதியில் ஓல்ட் கென்ட் சாலையில் அமைந்துள்ள Pho Na உணவகத்திலேயே ஆட்டிறைச்சி என குறிப்பிட்டு நாய் இறைச்சியை பயன்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில், அது நாய் இறைச்சி என உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் எலிகளின் எச்சங்கள் காணப்பட்டதாகவும் உயிருள்ள மற்றும் இறந்த கரப்பான் பூச்சிகளைக் கண்டதாகவும் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில், அந்த உணவகத்தின் உரிமையாளர் குவோக் நுயென் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பல குற்றங்களுக்கு தாம் பொறுப்பல்ல என்றே தெரிவித்துள்ளார்.
மேலும் தமது உணவகத்தில் நாய் இறைச்சி கண்டெடுக்கப்பட்டதன் பின்னணி தமக்கு தெரியவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அந்த இறைச்சி தமக்கு இன்னொருவரால் அனுப்பி வைக்கப்பட்டது என்றும், அது உணவகத்தில் பயன்பாட்டிற்கானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஐந்து மில்லியன் நாய்கள்
இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி மீண்டும் நடைபெற உள்ளது. Pho Na உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்றே தகவல் கசிந்துள்ளது.
நாய் இறைச்சி கண்டுபிடிக்கும் முன்னர் வரையில் Pho Na உணவகம் அப்பகுதியில் பிரபலமான ஒன்று என்றே கூறப்படுகிறது. Humane World என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் வியட்நாமில் சுமார் ஐந்து மில்லியன் நாய்கள் திருடப்பட்டு, கடத்தப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்படுவதாக தெரிய வருகிறது.
சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் டஹ்ற்போதும் நாய் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |