இந்திய ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்: அமெரிக்கா விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் விமானப்படையின் F-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது.
பாகிஸ்தானிடம் விளக்கம்
இந்திய செய்தி நிறுவனம் ஒன்று முன்வைத்த கேள்விக்கு, F-16 போர் விமானம் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கவே அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மே 7 முதல் மே 10 வரையில் நடந்த, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்பட்ட கடுமையான போரின் போது பாகிஸ்தான் பல F-16 போர் விமானங்களை இழந்ததாக இந்தியா முன்னதாகக் கூறியிருந்தது.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்திய விமானப்படைத் தலைவர் தெரிவிக்கையில், ஷாபாஸ் ஜகோபாபாத் விமானநிலையம் தாக்கப்பட்ட முக்கிய விமானநிலையங்களில் ஒன்றாகும்.
6 போர் விமானங்கள்
இங்கே, ஒரு F-16 விமானத் தளம் உள்ளது என்றார். மேலும் விமானத் தளத்தின் ஒரு பாதி முழுமையாக சேதமடைந்துவிட்டது. உள்ளே சில விமானங்கள் சேதமடைந்திருக்க வேண்டும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தரப்பில் 6 போர் விமானங்களை இழந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அதில் சில F-16 போர் விமானங்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான் தரப்பில் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளதுடன், சந்தேகம் என்றால் இரு தரப்பினரும் தங்கள் விமானங்களை சுயாதீன சரிபார்ப்புக்கு உட்படுத்தட்டும் என அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |