கிழக்கு லண்டனில் வன்முறை தாக்குதல்: கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயம்
கிழக்கு லண்டனில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லண்டனில் கத்திக்குத்து வன்முறை
கிழக்கு லண்டனின் ஸ்டிராட்போர்டில்(Stratford) வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வன்முறை தாக்குதலில் மூன்று பேர் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிராட்வேயில் அதிகாலை 4:00 மணிக்கு சற்று முன் ஒரு பெரிய குழு சண்டையிடுவதாக வந்த தகவல்களுக்கு பொலிசார் பதிலளித்தனர்.
இதையடுத்து காயமடைந்த நான்கு பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், 22 வயது, 32 வயது மற்றும் 36 வயதுடைய மூன்று பேருக்கு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாகவும், அவை ஆபத்தானவை அல்ல என்றும், நிரந்தர பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
26 வயதான நான்காவது நபருக்கு தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது.
நபர் ஒருவர் கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய டவுன் ஹாலுக்கு வெளியே உள்ள பகுதி பல மணி நேரம் சுற்றி வளைத்து, தடயவியல் ஆய்வாளர்கள் ஆதாரங்களை சேகரித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |