லண்டனில் பள்ளி நுழைவு வாயிலில் நடந்த மரணம்: வீடுகளுக்கு திரும்பிய மாணவர்கள்
பிரித்தானியாவில் பள்ளி நுழைவு வாயிலுக்கு அருகே நடந்த உயிரிழப்பை தொடர்ந்து பள்ளி திடீரென மூடப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
மேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள டெடிங்டன் பள்ளியின் நுழைவு வாயிலுக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பள்ளி உடனடியாக மூடப்பட்டுள்ளது.
லண்டன் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு காலை 7:17 மணியளவில் ப்ரூம் சாலையில் கவலைக்கிடமான நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவைகள் தீவிர உயிர் காக்கும் முயற்சிகளை செய்தும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மூடப்பட்ட பள்ளி
இந்த சம்பவத்தை தொடர்ந்து டெடிங்டன் பள்ளியானது உடனடியாக மூடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பத்திரமாக மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டனர்.
பள்ளி வளாகத்தை சுற்றி ஏராளமான காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருப்பது இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |