இந்த மொடல் கார்கள் திருடப்படலாம்: பட்டியலிட்டு எச்சரித்த லண்டன் பொலிசார்
சந்தையில் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள திருட்டுக்கு பயன்படும் புதிய கருவியால், குறிப்பிட்ட சில மொடல் கார்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாரதிகள் அவதானம்
திருடர்களால் தொடர்ந்து குறிவைக்கப்படும் ஆறு கார் மொடல்கள் தொடர்பில் பெருநகர காவல்துறை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சாரதிகள் அவதானமாக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் முதல் 10 வாரங்களில் மட்டும், குறிப்பிட்ட 6 மொடல்களில் சுமார் 70 கார்கள் திருடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த மொடல் கார்களை தொடர்ந்து திருடர்கள் குறிவைத்தும் வருகின்றனர் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் புதிதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள திருட்டுக்கு பயன்படுத்தும் கருவி காரணமாகவே, தொடர்புடைய 6 மொடல் கார்கள் இலக்காகி வருகிறது. தொடர்புடைய கார்களில் சாவி இன்றி திறக்கும் தொழில்நுட்பம் உள்ளது, இதனால் திருடர்களால் அந்த தொழில்நுட்பத்தை புதிய கருவிகளால் எளிதாக முறியடிக்க முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பொலிசார் அறிவுரை மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது faraday pouch எனப்படும் சமிக்ஞைகளை முடக்கும் கருவி ஒன்றை வாங்க சாரதிகள் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதி எடுக்க முடியாமல் போகும்
இதனால் திருடர்கள் உங்கள் வாகனத்தின் சமிக்ஞைகளை பிரதி எடுக்க முடியாமல் போகும் எனவும் விளக்கமளித்துள்ளனர். மேலும், அடிக்கடி தங்கள் faraday pouch செயல்படுகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டு எனவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
5 பவுண்டுகள் தொகைக்கு faraday pouch விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர்புடைய 6 மொடல் கார்களின் சாரதிகளும் தங்கள் வானகத்தை திருட்டில் இருந்து காக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்னொன்று steering wheel lock. இது மேலதிக பாதுகாப்பை அளிக்கும் எனவும், 50ல் இருந்து 150 பவுண்டுகள் தொகைக்கு இதை வாங்கி பயன்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.