லண்டன் சுரங்கப்பாதையில் கால்சட்டை இல்லாமல் பயணம் செய்த பயணிகள்: வைரல் புகைப்படங்கள்
லண்டன் சுரங்கப்பாதை பயணிகள் “கால்சட்டை இல்லாத பயணம்” செய்யும் நிகழ்வில் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
கால்சட்டை இல்லாத சுரங்கப்பாதை பயணம்
லண்டன்வாசிகள் குளிரை மீறி தங்கள் கால் சட்டைகளை கழற்றி, வருடாந்திர 'கால்சட்டை இல்லாத சுரங்கப்பாதை பயணம்' என்ற வித்தியாசமான பொது நிகழ்த்து கலை நிகழ்வில் பங்கேற்றனர்.
சுரங்கப்பாதை பயணிகள் சட்டை மற்றும் காலணிகளுடன் இருந்தாலும், கால் சட்டை அணியாமல் உள்ளாடைகளுடன் மட்டும் பயணிகள் ரயிலில் ஏறியதைக் கண்டதும் பயணிகள் சிலர் ஆச்சரியமடைந்தனர்.
Watch: This was the Official No Trousers Tube Ride, an annual event with no point other than injecting a little levity into the bleak midwinter. No deep meaning, no bigger motive. The only goal was to be silly, if but for one afternoon. pic.twitter.com/AL8KMwdWtk
— The Associated Press (@AP) January 14, 2025
பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் உள்ளாடைகளை அணிந்திருந்த பங்கேற்பாளர்கள், ஒருவரையொருவர் பார்த்து புன்னகை புரிந்து கொண்டால் ரயில் பெட்டி முழுவதும் சிரிப்பலை நிரம்பி இருந்தது.
இந்த கூட்டம் வாட்டர்லூ(Waterloo) நிலையத்தில் கூடியது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்ட "கால்சட்டை இல்லாத சுரங்கப்பாதை பயணம்", தற்போது உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்களை முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்ள வைத்து, தினசரி பயணத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியை பரப்ப ஊக்குவிக்கிறது.
7 பேருடன் சிறிய அளவில் தொடங்கிய இந்த “கால்சட்டை இல்லாத சுரங்கப்பாதை பயணம்” 2006ம் ஆண்டு 150 பேருடன் கொண்டாடப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் 8 பேர் ஒழுங்கீன நடத்தைக்காக அப்போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |