லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Police London Christmas UnitedKingdom
By Kaviarasan Nov 22, 2021 05:14 PM GMT
Report

தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் மிகவும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி லண்டன் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சமீப காலங்களில் நடக்கும் சம்பவங்களை கருத்தில் கொண்டு, பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்ந்திருப்பதாகவும், இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக லண்டன் மக்கள் விழிப்புடன் இருக்கும் படி வலியுறுத்தப்படுகிறது.

ஏனெனில், சமீபத்தில் Liverpool மற்றும் Essex-ல் நடந்த தாக்குதல்களை தொடர்ந்து, லண்டன் நகர காவல்துறை மற்றும் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Londoners Warned To Be Vigilant In Crowded Spaces

பண்டிகை நாட்கள் வருவதால், பரபரப்பான ஷாப்பிங் செய்யும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களில் ரோந்து பணிகள் வரும் வாரங்களில் தொடரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரி கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் வைத்து தயாரிப்பதற்கு தேவையான வெடிகுண்டிற்கான உதிர்பாகங்களை வாங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Londoners Warned To Be Vigilant In Crowded Spaces

உள்துறைச் செயலர் Priti Patel, அச்சுறுத்தல் அளவு கடுமையாக' உயர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு மாதத்தில் தலைநகரில் நடந்த இரண்டாவது சம்பவம்(மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், MP கத்தியால் குத்தப்பட்டு கொலை) என்பதால், தாக்குதல் நடக்க வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், மூத்த பொலிஸ் அதிகாரி Matt Twist இன்று கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, லண்டன் ஓரளவுக்கு அதன் பண்டிகை காலங்களில் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த சில வாரங்களாக Essex மற்றும் Liverpool-ல் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது, பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது என்பது தெரிகிறது.

எனவே, மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம். மேலும் வெளியில் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US