பிரித்தானியா எம்.பி.யை குத்திக் கொன்றது எப்படி? நடந்தது என்ன? வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியா எம்.பி.சர் டேவிட் அமேஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி அவரை எப்படி குத்தி கொன்றுள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் கன்சர்வெடிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி Sir David Amess, கடந்த 15-ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் Essex-ன் Leigh-on-Sea-யில் உள்ள தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 25 வயது மதிக்கத்தக்க சோமாலியா வம்சாவளியைச் சேர்ந்த Harbi Ali Kullane என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Belmarsh சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நபர், கடந்த வெள்ளிக் கிழமை முதல் முறையாக வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

அப்போது அவரின் பிறந்த திகதி மற்றும் பெயர் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து வரும் 5-ஆம் திகதி இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கொலையாளி என்று சந்தேகிக்கப்படும், Harbi Ali Kullane இரண்டு ஆண்டுகளாக எம்.பியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.
அதன் படி தேவாலயத்தில் எம்.பி.இருப்பதை அறிந்த அவன், உடனடியாக வடக்கு லண்டனின் Kentish Town-ல் உள்ள தனது வீட்டில் இருந்து இரயில் மூலம் அங்லி விரைந்துள்ளான்.

அதன் பின், அங்கிருக்கும் மக்களோடு மக்களாக நுழைந்த இவன், எம்.பி. போனை எடுத்து ஸ்க்ரோல் செய்து பார்த்த அந்த நிமிடத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை குத்த ஆரம்பித்துள்ளான்.
இதனால் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை முடிவில், அவருடைய மார்பில் பல கத்திகுத்து காயங்கள் இருப்பதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.                        
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        