முடிவின்றி கொட்டும் தலை முடி - வீட்டில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் மூலம் நீளமாக வளர்க்கலாம்
முடி உதிர்வது உங்களை தொந்தரவு செய்கிறதா? முடி கொட்டுவதால் உங்கள் தலைமுடி பாதியாக குறைந்துள்ளதா? உங்கள் தலைமுடியின் வளர்ச்சி நின்றுவிட்டதா, நீளமும் குறைந்ததா? அப்படியானால் வீட்டிலேயே செய்யப்படும் இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம்.
ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்?
நிச்சயமாக பெண்கள் அனைவரும் நீண்ட கூந்தலை விரும்புகிறார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால், முடி உதிர ஆரம்பித்து, வளர்ச்சி குறைகிறது.
முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கூந்தலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காததால், முடி வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்.
முடி உதிர்வை குறைக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உங்கள் உணவில் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வதோடு, முடி பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில் வீட்டில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய எண்ணெய் என்ன என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டிலேயே எண்ணெய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- ரோஸ்மேரி எண்ணெய் - 1 தேக்கரண்டி
- எள் எண்ணெய் - 7 தேக்கரண்டி
- வெந்தய விதைகள் - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி
செய்முறை
- வெந்தய விதைகள் மற்றும் கறிவேப்பிலையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உலர்த்தி வறுக்கவும்.
- அவற்றின் நிறம் மாறி வரும் போது, அரைத்துக்கொள்ளவும்.
- இப்போது அதில் இரண்டு எண்ணெய்களையும் கலக்கவும்.
- இந்த எண்ணெயை முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும்.
- பின் மணி நேரம் கழித்து முடியைக் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |