Entry Exit திட்டம்: ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள்
ஏப்ரல் 10ஆம் திகதி, Entry/Exit System (EES) முழுமையாக அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்கள் பலர் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.
அமுலுக்கு வந்த Entry Exit திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) என்னும் திட்டத்தின் கீழ், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

இந்த Entry Exit திட்டம், இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது.
துவங்கிய சிக்கல்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், இப்போது பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு அல்ல. ஆக, பிரித்தானியர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, இத்தாலிக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்ப முயன்ற பிரித்தானியர்கள் எதிர்பாராத பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டார்கள்.

ஆம், இத்தாலியிலும் Entry Exit திட்டம் அமுலுக்கு வந்துள்ளதால், நாடு திரும்பும் பிரித்தானிய பயணிகள் பல மணி நேரம் இத்தாலி எல்லையில் காத்திருக்க நேர்ந்தது.
அதைவிட மோசமான விடயம் என்னவென்றால், சுமார் 130 பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா புறப்படவேண்டிய EASYJET நிறுவன விமானம் ஒன்று, பயணிகள் விமானம் ஏற தாமதம் ஆனாதால், வெறும் 30 பயணிகளுடன் புறப்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பிரித்தானியர்கள் சிலர் மயக்கமடைந்ததாகவும், வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
தொடரும் சிக்கல்
Entry Exit திட்டம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, இத்தாலியில் மட்டுமல்ல, பல நாடுகளுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்கள் அதே நிலையை எதிர்கொண்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ், போலந்தின் Krakow, ஆம்ஸ்டர்டாமின் Schiphol ஆகிய விமான நிலையங்களிலும் தாங்கள் பல மணி நேரம் கத்திருக்க நேர்ந்ததாக பிரித்தானியர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துவருகிறார்கள்.
ஆக, ஐரோப்பாவுக்குச் செல்லும் பிரித்தானியர்கள் இன்னும் சிறிது காலம் இந்த சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால், அதற்காக முன்கூட்டியே தங்களை தயார்படுத்திக்கொள்வது உதவியாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |