CSK-வில் இவருடைய ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன்! எப்படி விளையாடுவாரோ? பிரட்லி ஓபன் டாக்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, சென்னை அணியில் புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் வீரரின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் மிகப் பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் இந்தாண்டு நேற்று நடைபெற்றது. நேற்றைய முதல் ஆட்டத்தில், மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்றைய போட்டியில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ, புஜாராவின் ஆட்டத்தைக் காண மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், அவர் புஜாரா மிக மிக அபாரமான பேட்ஸ்மேன் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மிக அதிக அளவில் நம்பிக்கையும் மன உறுதியும் கொண்ட வீரராக நான் அவரைப் பார்க்கிறேன்.
அவர் எப்போதும் அணிக்கு தேவைப்படும் விஷயங்களை செய்து கொண்டே வருவார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் கூட அவர் மிகச் சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடினார்.
நான் உண்மையில் அவருடைய மிகப்பெரிய ரசிகன், டெஸ்ட் போட்டிகளை போன்று டி20 போட்டிகளில் அல்ல. வெறும் 90 நிமிடங்கள் தான் இங்கே பேட்ஸ்மேன்களால் ஆட முடியும். எனவே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டிய நிர்ப்பந்தம் இங்கு இருக்கும்.
அதை புஜாரா எவ்வாறு மேற்கொள்ள போகிறார் என்று காண மிகவும் ஆவலாக உள்ளேன். அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு கிடைக்குமா ? அல்லது கிடைக்காதா ? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறும் பட்சத்தில் நிச்சயமாக தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
