சிவனுக்கு பிடித்த ராசிகள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 5 ராசியினர் யார்?
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் பக்தர்களுக்கு வாரி வழங்கும் தெய்வமாகவும் உள்ளார்.
சிவனுக்கு உகந்த பண்டிகைகளில் மகா சிவராத்திரி மிக முக்கியமான ஒன்றாகும்.
அந்தவகையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், சிவனுக்கு பிடித்த ராசிகளான குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகின்றனர்.
மேஷம்
வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய சிவ பெருமான் உடன் இருந்து உதவி செய்கிறார். சிவனருளால் இவர்கள் பல உச்சங்களை தொடுகிறார்கள். நேர்மையாகவும், உதவும் பண்புடனும் இருக்கும் இவர்களை சிவபெருமான் எப்போதும் கைவிடுவதில்லை. வணிகத்திலும் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைப்பதோடு, ஈசன் அருளால் இவர்கள் அலுவலக பணிகளிலும் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சிவ பெருமானின் செல்லப்பிள்ளைகளாக பார்க்கப்படுகிறார்கள். சிவ பெருமான் இவர்களை எப்போதும் தனது அருள் வட்டத்தில் வைத்திருக்கிறார். கல்வி, பேச்சாற்றல், புத்திசாலித்தனம் ஆகியவற்றை அளித்து ஈசன் இவர்களை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வைக்கிறார். இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். சிவ பக்தியால் மகிழும் ராசிக்காரர்கள் இவர்கள். ஏழரை சனி காலத்திலும் துலா ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும்.
விருச்சிகம்
இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதி. விருச்சிக ராசிக்காரர்கள் மீது சிவ பெருமான் சிறப்பு ஆசீர்வாதங்களை பொழிகிறார். சிவன் அருளால், இவர்கள் கல்வி, பணியிடம், வர்த்தகம் என அனைத்து இடங்களிலும் சிறந்த பலன்களை பெறுகிறார்கள். சிவபெருமானின் சிறப்பு அருளால், இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் மனமுருகி சிவனை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும்.
மகரம்
மகர ராசி சனியால் ஆளப்படும் ராசி. மேலும் சனி பகவான் சிவனை தனது தெய்வமாகக் கருதுகிறார். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். சனி அருளால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்பில் திளைக்கிறார்கள். சிவனது அருட்பார்வை இவர்கள் மீது எப்போதும் இருக்கின்றது. இவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். சிவ பெருமானுக்கும் பிடித்த ராசியாக இது இருப்பதால், சிவன் மற்றும் சனி என இருரின் ஆசிகளும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கின்றன. இவர்களுக்கு சனி பெயர்ச்சி, ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவன் அருளால் உடனடி தீர்வு கிடைக்கும். இவற்றின் பாதிப்புகள் கும்ப ராசிக்காரர்களுக்கு குறைவாகவே இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |