பெண்கள், குழந்தை மீது சரிந்து விழுந்த லொறி: 2 மணிநேர போராட்டத்திற்கு பின் உடல்கள் மீட்பு
இந்திய மாநிலம் குஜராத்தில் மணல் லொறி சரிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மணல் லொறி
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. குறுகிய பாதை வழியாக லொறி செல்ல முயன்றபோது திடீரென விபத்திற்குள்ளனது.
நிலைதடுமாறி லொறி சரிந்ததில், சாலை அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிக்கினர். அவர்களுடன் குழந்தை ஒன்றும் சிக்கிக் கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிரேன் உதவியுடன் சரிந்த விழுந்த லொறிக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க போராடினர்.
நசுங்கிய நிலையில் உடல்கள்
ஆனால் உடல் நசுங்கிய நிலையில் குழந்தை மற்றும் 3 பெண்ககள் என 4 பேரின் உடல்கள், இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களின் உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கனவா (24), சோனல்பென் நினாமா (22), இலபென் பபோர் (40) மற்றும் ருத்ரா (2) என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |