ஆப்பிரிக்க நாடொன்றில் லொறி கவிழ்ந்து 30 பேர் பலி: உயிரிழப்புகள் மேலும் உயரும் அபாயம்
மேற்கு ஐரோப்பிய நாடான நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் பயணிகள் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
லொறி கவிழ்ந்து 30 பேர் பலி
நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகர நெடுஞ்சாலையில் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இதனால் இதில் லொறியில் பயணம் செய்த 30 பயணிகள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். மீட்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
லொறியானது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[XNGSQKQ[
நைஜீரியா அதிக மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்க நாடாகும், இங்கு முறையான சாலை வசதிகள் இல்லாதது மற்றும் போக்குவரத்து சட்டங்கள் முறையாக அமுல்படுத்தாதது ஆகியவை அடிக்கடி இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |