ஒரே மாதத்தில் உடல் எடை குறைய இந்த 2 பொருட்கள் போதும்: இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
கொள்ளை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் எடை குறைக்கும் என்கிறார்கள்.
அதேபோல் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகளை சரி செய்யும். இதனால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
இந்த 2 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரே மாதத்தில் நம் உடல் எடை குறையும்.இதனை எப்படி எடுத்துக்கொள்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு பருப்பு-200 கிராம்
- பூண்டு- 150 கிராம்
செய்முறை
கொள்ளு பருப்பை நன்றாக சுத்தம் காயவைத்து வெறும் கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டை தோல் உறித்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கொள்ளு பாதி வறுபட்டவுடன் அதனுடன் சேர்த்து பூண்டையும் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
Getty Images
இரண்டும் ஆறியவுடன் அதை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தப்பொடியை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். தினமும் காலையில் இந்தப்பொடியை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.
தொடர்ந்து இதை குடித்து வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறைவதை நீங்களே உணரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |