ஜிம்முக்கு போகாமலே உடல் எடையை குறைக்க வேண்டுமா? இவற்றை மறக்கமால் தினமும் செய்தால் போதும்!
உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு உடல் எடை குறைந்த மாதிரியே தெரியாது.
எவ்வளவு தான் டயட் இருந்தாலும் உடல் எடையை குறைக்க ஒரு சில உடற்பயிற்சிகளை ஜிம் செய்யமால் வீட்டில் இருந்தவாறே செய்து வருவது நல்லது.
தற்போது ஜிம்முக்கு போகாமலே உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான பயிற்சிகளை செய்யலாம் என்பதை பார்ப்போம்.
மாடிப்படி ஏறுதல்
தினமும் உங்கள் வீட்டு மாடிப்படி ஏறி இறங்குவது ஒரு நல்ல உடற்பயிற்சியாக திகழ்கிறது. உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கார்டியோ வகை உடற்பயிற்சிகளை செய்வதைப் போன்று அதற்கு ஈடான நன்மைகளை தரக்கூடியது, மாடிப்படி ஏறுவது.
தொப்பையைக் குறைக்க
தரையில் படுத்துக் கொண்டு TV பார்க்கும் போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும்.
கீழுடல் மற்றும் மேலுடலுக்கான பயிற்சி
லன்ஜஸ், ஸ்குவாட், ஜம்ப் ஸ்க்வாட், பில்லட்ஸ், டாங்கி கிக்ஸ் (Lunges, Squad, Jump Squad, Pilates, Donkey Kicks) போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
வீட்டிலேயே செய்யக்கூடிய கெட்டில் பெல், டம்பெல்ஸ், புல் அப்ஸ், புஷ் அப்ஸ் (Kettle Bell, Dumbbells, Pull Ups, Push Ups) போன்ற பயிற்சிகளை செய்யலாம். பிளாங்க் பயிற்சிகள் கைகள் மற்றும் தோள்களுக்கு வலு சேர்ப்பவை. இவை தவிர டபாட்டா போன்ற High Intensity Style பயிற்சிகளையும் நீங்கள் செய்யலாம்.
உட்கார்ந்து எழுதலும் உடற்பயிற்சி
நாற்காலியில் உட்கார்ந்து உங்க கால்களை தரையில் தட்டையாக வையுங்கள். உங்க கைகளை முழங்கையில் இருந்து மடித்து, படத்தில் காட்டியுள்ளவாறு உங்க மார்பின் அருகே ஒன்றாகப் பிடிக்க வேண்டும்.
இது தான் தொடக்க நிலை. இப்பொழுது எழுந்து நின்று உங்க இடது காலை நாற்காலிக்கு மேலே ஒரு படி மேலே வையுங்கள். உங்க இடது தொடை மற்றும் வலது தாடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
உங்க எடையை முன்னோக்கி மாற்றி, உடலை குறைக்க முற்படுங்கள். 2-5 விநாடிகள் இடை நிறுத்தி பின்பு இடது குதிகாலை தரையில் அழுத்தவும். உங்க பின்னால் உள்ள நாற்காலியில் கையை வைத்து சப்போர்ட் ஆக சரிந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இதே மாதிரி மற்ற காலுக்கும் செய்யவும்.
ஸ்கிப்பிங், குதித்தல் மற்றும் ஜாக்கிங் பயிற்சி
ஸ்கிப்பிங் ஒரு சிறுவயது விளையாட்டுதான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது செய்து வரலாம்.