பிள்ளைகளுடன் நதிக்குச் சென்ற பிரித்தானியர் கண்ட முகம் சுழிக்கவைக்கும் காட்சி
பிரித்தானியர் ஒருவர் வேல்ஸ் நாட்டிலுள்ள நதி ஒன்றிற்கு தன் குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில், முகம் சுழிக்கவைக்கும் காட்சி ஒன்றைக் கண்டுள்ளார்.
முகம் சுழிக்கவைக்கும் காட்சி
வேல்ஸ் நாட்டில், சுற்றுச்சூழல் அமைப்பொன்றின் தூதரான Will Millard என்பவர், தன் குழந்தைகள், தன் சகோதரி, அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் Powys என்னுமிடத்தில் ஓடும் River Edw என்னும் நதிக்குச் சென்றுள்ளார்.
பிள்ளைகள் ஜாலியாக தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது Willஇன் சகோதரி கணவர் தற்செயலாக ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார்.
Completely disgusted by this in the River Edw.
— Will Millard (@MillardWill) July 2, 2023
Have reported to the @NatResWales pollution hotline. ? pic.twitter.com/dlb1QBDFyC
ஆம், சற்று தொலைவில் அந்த நதியில் பெருமளவில் மனித மலம் கிடப்பதை அவர் கவனித்துள்ளார். உடனே நதியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாரும் அருவருப்படைந்து வெளியேறியுள்ளார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்துச்சென்று குளிக்கவைத்தபிறகும் அவர்களால் அந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை.
சுற்றுச்சூழல் அமைப்பில் புகார்
தான் கண்ட விடயம் குறித்து Will வேல்ஸ் நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பில் புகார் செய்துள்ளார். அதிகாரிகள் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
அத்துடன், நதியை அசுத்தமாக்கும் சம்பவங்கள் எதையாவது யாராவது கண்டால் தங்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |