பிரித்தானியாவில் தாய் மற்றும் 2 குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம்: அதிர்ச்சியூட்டும் விபத்துக்கான காரணம்
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் 2 சிறுவர்கள் மற்றும் பெண் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில், இ-பைக்கை நீண்ட நேரம் சார்ஜ் செய்ததே தீ விபத்திற்கான காரணம் என தீயணைப்பு வீரர்கள் விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டு மனை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 31 வயதுடைய ஜெம்மா ஜெர்மினி(Gemma Germeney,) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அத்துடன் 8 வயதுடைய லில்லி பெடன் மற்றும் 4 வயதுடைய ஆலிவர் பெடன் என்ற இரண்டு குழந்தைகள் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.
Rex
இந்த தீ விபத்தில் இருந்து 30 வயதுடைய ஆண் ஒருவர் உயிர் தப்பிய நிலையில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிங்ஸ் ஹெட்ஜ்ஸில் உள்ள சாக்வில்லே குளோஸில்(Sackville Close, King's Hedges) வெள்ளிக்கிழமை அதிகாலை 1:08 மணிக்கு தீ விபத்து தொடர்பான தகவல்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டு மனை முழுவதும் தீக்கு இரையானது.
விபத்திற்கான காரணம்
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வந்த நிலையில், இ-பைக் நீண்ட நேரம் சார்ஜ் செய்யப்பட்டதே சம்பந்தப்பட்ட வீட்டில் தீ விபத்து ஏற்பட காரணம் என தீயணைப்பு வீரர்கள் சோதனையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கேம்பிரிட்ஜ்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து, இ-பைக் சார்ஜ் செய்யப்பட்டதே விபத்து ஏற்படுவதற்கான அதிக சாத்தியமான காரணமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரவு நேரங்களில் இ-பைக் அல்லது இ-ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதை தவிர்க்கவும், அதே சமயம் இ-பைக் அல்லது இ-ஸ்கூட்டரில் உள்ள பேட்டரிகள் முழு சார்ஜ் அடைவதற்கு தேவையான நேரத்திற்கும் அதிக நேரம் ஜார்ஜில் வைத்து இருப்பதை தவிர்க்கவும் என தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |