பிரித்தானியாவில் தீ விபத்து: 2 சிறுவர்கள் மற்றும் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் பெண் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டு மனை ஒன்று முழுவதுமாக தீக்கு இரையாகி சேதமடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1:08 மணிக்கு தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
Pic: Rex
கிங்ஸ் ஹெட்ஜ்ஸில் உள்ள சாக்வில்லே குளோஸில்(Sackville Close, King's Hedges) ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
அத்துடன் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவுவதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.
3 பேர் பலி
இந்த தீ விபத்தில் இருந்து ஆண் ஒருவர் உயிர் தப்பிய நிலையில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.
Pic: Rex
இருப்பினும் பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி கமெண்டர் ஸ்டூவர்ட் ஸ்மித் பேசிய போது, இந்த சோகமான நிகழ்வு பொதுமக்கள் பலரை கவலையில் தள்ளியுள்ளது, பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |