நடுக்கடலில் தீப்பிடித்த படகு: சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
பிரித்தானியர்கள் பலர் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், நடுக்கடலில் அவர்களுடைய படகு தீப்பிடித்ததால் அவர்கள் கடலில் குதிக்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
நடுக்கடலில் தீப்பிடித்த படகு
கிரீஸ் தீவுகளில் ஒன்றான Rhodes தீவுக்கு பிரித்தானியர்கள் பலர் சுற்றுலா சென்றிருந்தார்கள். அப்போது, கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் அவர்கள் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த படகில் திடீரென தீப்பற்றியது.
உடனடியாக லைஃப் ஜாக்கெட்களை அவர்களுக்குக் கொடுத்த படகின் கேப்டன், அவர்கள் அனைவரையும் கடலில் குதிக்க உத்தரவிட்டுள்ளார். அவர்களில் சிறுவர்களும் அடக்கம்.
Image: SHAUN WILLIAMS
அதிர்ச்சியில் உறைந்த சிறுபிள்ளைகள்
எல்லை பாதுகாப்புப் படையினர் படகில் பயணித்த 82 பேரையும், பலரை கடலிலிருந்தும், சிலரை எரிந்துகொண்டிருக்கும் படகிலிருந்தும் மீட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த படகில் பயணித்த சிறுபிள்ளைகளை பெரிதும் பாதித்துள்ளது.
Image: SHAUN WILLIAMS
அவர்கள் பயத்திலும் அதிர்ச்சியிலுமிருந்து விடுபட நீண்ட காலம் ஆகலாம். தீயை அணைக்க ஊழியர்கள் முயற்சி செய்தும், அது முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட படகு என்பதால் தீயை அணைக்கமுடியாமல் போயுள்ளது. அந்த படகு முழுமையாகவே தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |