வழுக்கை தலையில் முடி வளர தேய்க்கப்பட்ட லோஷனால் உடல்நல பாதிப்பு
வழுக்கை தலையில் முடி வளர கொடுத்த லோஷனால் பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழுக்கை தலையில் முடி
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத், சண்டுலால் பகுதியில் பிக்பாஸ் என்ற சலூன் கடை உள்ளது. இந்த கடையில் வழுக்கை தலையில் முடி வளர்வதற்கான லோஷன் கொடுப்பதாக தகவல் பரவியது.
இதனால் இந்த கடையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் குவிந்தனர். கடைக்கு வந்தவர்களின் தலையில் இருந்த முடியை முழுமையாக ஷேவ் செய்தார் சலூன் கடைக்காரரான வகில் சல்மானி. பின்னர் அவர்களது தலையில் வெள்ளை நிற லோஷனையும் தடவினார்.
அதோடு, 3 நாட்களுக்கு சோப், ஷாம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதில் பலருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது . கடுமையான தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர்.
இதனிடையே, சலூன் கடைக்காரர் கடையை அடைத்துவிட்டு தலைமறைவானார்.
Bald men land in hospital in Hyderabad after trying "Hair Regrowth lotion" @TheSiasatDaily #Hyderabad #Bald pic.twitter.com/QNmxR9vQVU
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) April 7, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |