உலகிலேயே மிகப்பெரிய பெட்ரோல் பம்ப் எங்குள்ளது தெரியுமா?
உலகிலேயே மிகப்பெரிய அளவிலும், ஒரே நேரத்தில் 120 கார்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய பெட்ரோல் பம்ப் எங்குள்ளது என்பதை பார்க்கலாம்.
மிகப்பெரிய பெட்ரோல் பம்ப்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் அமைந்திருக்கும் பெட்ரோல் பம்ப் ஆனது மால் போல காட்சி அளிக்கிறது. இந்த பெட்ரோல் பங்கானது ஆஸ்டினிலிருந்து 47 மைல்கள் தொலைவில் உள்ளது.
இதற்கு சொந்தக்காரர் பியூசி ஆவார். இங்கு ஒரே நேரத்தில் 120 கார்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய 120 பெட்ரோல் பம்ப் உள்ளது.
அண்மையில் டாட் என்ற ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் ஒருவர் இந்த பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இங்கு எரிபொருள் மட்டுமல்லாமல் இனிப்புகள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சுத்தமான கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு இறைச்சிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் மீட் என்ற பன் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக இன்ஃப்ளுயன்சர் கூறியுள்ளார். அதோடு, கொரியன் பார்பிக்யூ தனக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இங்கு சாஃப்ட் டிரிங்க்ஸ் டிஸ்பென்சர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்குள்ள நக்கட்ஸ் சுவையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |