லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றவரின் மனைவி: இன்றைய நிலை
பிரித்தானியாவில் லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றவரின் மனைவி என்பதால் பிரபலமாக விளங்கிய ஒரு பெண், இன்று தனது கேரவனில் வாழ்க்கையை செலவிட்டுக்கொண்டிருக்கிறார்!
Lotto wife
இங்கிலாந்திலுள்ள எசெக்ஸைச் சேர்ந்த மிஷெல் ஓக்ஸ் (Michelle Oakes), தன் கணவர் லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றதும், பிரம்மாண்டமான வீடு, குதிரைகள், நீச்சல் குளம் என ஆடம்பரமாக வாழ்ந்ததால், ஊடகங்கள் அவரை ‘Lotto wife’ என்றே விமர்சித்தன.

வெளியே ஆடம்பரமாக வாழ்ந்தாலும், மிஷெலுக்கு திருமண வாழ்வு திருப்தியைக் கொடுக்கவில்லை. 23 வயதில் ஏற்கனவே ஒரு முறை திருமணமாகி, விவாகரத்தானபிறகுதான் ஃபெக்ஸி சாரதியான கேரி ப்ராண்ட் (Gary Brand) என்பவரை திருமணம் செய்திருந்தார் மிஷெல்.
கேரிக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் பரிசு கிடைக்க, மனைவிக்காக கண்மூடித்தனமாக செலவு செய்தார் கேரி. கணவனும் மனைவியுமாக உலகை சுற்றிவந்தார்கள்.
ஆனால். அந்த திருமண வாழ்வும் கசந்தது மிஷெலுக்கு. அதற்குப் பிறகு மூன்று முறை திருமணம் செய்தும், நமக்கு திருமண வாழ்க்கை எல்லாம் சரி வராது என இன்று தனியாக வாழ்கிறார் மிஷெல்.

அன்று தனக்கென தனியாக ஒரு நீச்சல் குளமே இருந்தது மிஷெலுக்கு.
இன்று, முதியவர்களை கவனித்துக்கொள்ளும் வேலை செய்யும் மிஷெல், நாள் முழுவதும் கடினமாக உழைத்தபின் தனது இரண்டு செல்ல நாய்களுடன் கேரவன் ஒன்றில் வாழ்ந்துவருகிறார்.

திருமணம், ஆடம்பர வாழ்வு உட்பட எதை எதையோ மகிழ்ச்சி என்று நினைத்தேன். ஆனால், எதுவுமே மகிழ்ச்சி தரவில்லை. இன்று ஒரு சிறிய கேரவனில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்று கூறும் மிஷெலிடம், மீண்டும் திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டால், ஆளை விடுங்கள், எல்லாம் போதும் என்கிறார்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |