ரூ.35 லட்சத்திற்கு விற்கப்படும் ஆட்டோ வடிவிலான கைப்பை - அப்படி என்ன சிறப்பு?
ரூ.35 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வடிவிலான கைப்பை இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக கைப்பைகள் ரூ.500 முதல் சில ஆயிரங்கள் வரை இருக்கும். ஆனால் ரூ.35 லட்சம் மதிப்பிலான கைப்பை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆட்டோ வடிவிலான கைப்பை
லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) என்பது பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பேஷன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம், உலகளவில் 50 நாடுகளில், 460 க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வருகிறது.
வசந்த மற்றும் கோடை கால 2026 தொகுப்பிற்காக, பல்வேறு வகையான கைப்பைகளை லூயிஸ் உய்ட்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், ஆட்டோ ரிக்சா வடிவிலான கைப்பை, இணையத்தையும் ஃபேஷன் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மோனோகிராம் கேன்வாஸ் தோலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைப்பையின் விலையை கேட்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஆட்டோ ரிக்சா வடிவிலான கைப்பையின் விலை சுமார் ரூ.35 லட்சம் ஆகும். இந்த விலைக்கு 10க்கும் மேற்பட்ட உண்மையான ஆட்டோவை வாங்கி விடலாம்.
லூயிஸ் உய்ட்டனின் தயாரிப்புகள் அனைத்தும், சிறந்த தரம் மற்றும் செயல்திறனுடன் உயர்தரப் பொருட்கள் கொண்டு, மிகுந்த அனுபவம் வாய்ந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே, லூயிஸ் உய்ட்டனின் தயாரிப்புகள் விலை அதிகமாக உள்ளது. லூயிஸ் உய்ட்டன் நிறுவனம், 2024 ஆம் ஆண்டு 84.7 பில்லியன் யூரோ(இந்திய மதிப்பில் 8.51 லட்சம் கோடி) வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |