பட்டப்பகலில் வங்கிக்குள் கோர சம்பவம்... முன்னாள் ஊழியரால் பலியான ஐந்து வாடிக்கையாளர்கள்: பலர் காயம்
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பிரபல வங்கி ஒன்றில் புகுந்த முன்னாள் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் ஐவர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லூயிஸ்வில்லி துப்பாக்கிச் சூடு
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. லூயிஸ்வில்லி பெருநகர காவல் துறை அதிகாரிகள் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரு பொலிசார் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
@getty
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதில் ஒருவர் பொலிஸ் அதிகாரி எனவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் வெளியானதும், ஆயுதம் ஏந்திய பொலிசார் வங்கிக்குள் அத்துமீறி நுழையும் நிலை எற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவிக்கையில், லூயிஸ்வில் வங்கியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலரை தனிப்பட்ட முறையில் தமக்கு அறிமுகமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
@Shutterstock
துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதும், 3 நிமிடங்களிலேயே பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆயுததாரியை எதிர்கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரி தற்கொலை
பொலிசாரின் பதில் தாக்குதலில் அந்த ஆயுததாரி கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல்தாரியின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ பாடசாலை ஒன்றில் புகுந்து துப்பாக்கிதாரி ஒருவர் சரமாரியாக சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.