நண்பனுக்கு அனுப்பிய குறுந்தகவல்... மொத்த நகரத்தையும் கலங்கடித்த இளைஞரின் புகைப்படம் வெளியானது
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய கொடூர இளைஞரின் புகைப்படம் வெளியானது.
தாக்குதல்தாரி உட்பட ஐவர்
கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ள Old National வங்கியிலேயே அந்த இளைஞர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், தாக்குதல்தாரி உட்பட ஐவர் பலியாகியுள்ளதுடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
image: facebook
குறித்த தாக்குதலை முன்னெடுத்த நபர் 23 வயதான Connor Sturgeon எனவும், இதே வங்கியில் முன்னர் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதல் சம்பவத்தை Connor Sturgeon தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையும் செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்த காணொளியை இணையத்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் பொலிஸ் தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தாக்குதலில் பலியான எஞ்சிய நால்வரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.
@getty
தாக்குதலுக்கான காரணம்
காயம்பட்டவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதில் ஒருவர் பொலிஸ் அதிகாரி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2021ல் முழு நேர ஊழியராக குறித்த வங்கியில் இணைந்த Connor Sturgeon, சமீபத்தில் தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுவே, தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. மேலும், குறித்த இளைஞர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையிலேயே Connor Sturgeon கொல்லப்பட்டதாக தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
@AP
இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர்கல் மீதூ துப்பாக்கிதாரி சுட்டுள்ளதாகவும், இதில் 6 பேர்கள் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், இதில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதில் ஒருவர் பொலிஸ் அதிகாரி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் Connor Sturgeon தமது நண்பரிடம் குறுந்தகவலில், தாம் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும், வங்கிக்குள் தாக்குதல் நடத்தப் போவதாக குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty