லூவ்ரே அருங்காட்சியகத்தில் துணிகர கொள்ளை: சந்தேக நபர்கள் இருவர் அதிரடி கைது
லூவ்ரே அருங்காட்சியகத்தில்(Louvre Museum) நடந்த திருட்டு சம்பவத்தை அடுத்து சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டு
பாரிஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அப்பல்லோ காட்சி அரங்கிற்குள் புகுந்து பேரரசர் நெப்போலியன் மற்றும் பேரரசிக்குரிய ஒன்பது நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
New footage reveals the bold Louvre heist: two thieves lowering themselves from a balcony on a stolen lift, jewels in hand. They hijacked the lift days earlier, disguised it, and tried to torch it—but guards intervened. Still on the run with $96M in loot. pic.twitter.com/QY7ZpahwF8
— Polymarket Intel (@PolymarketIntel) October 23, 2025
கழுத்து ஆபரணம்(Necklace) கிரீடம்(Tiara) மற்றும் ப்ரொச்(Brooch) என சுமார் $102 மில்லியன் மதிப்புள்ள அரிய பொருட்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் சீன் நதி பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட வேலைகளை பயன்படுத்தி கொண்டு கொள்ளையர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது
இந்நிலையில் லூவ்ரே அருங்காட்சியகத்தில்(Louvre Museum) நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிஸ்-சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இரவு 10 மணி அளவில் வெளிநாட்டு விமான ஒன்றில் ஏறச் சென்ற முதல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல் நபர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் பாரில் பிராந்தியத்தில் வைத்து இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இருவரும் விசாரணைக்காக தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |