பாதுகாப்பு அச்சுறுத்தல்... பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகம் எடுத்துள்ள முடிவு
பிரான்ஸ் மொத்தம் பேசுபொருளான கொள்ளை சம்பவத்திற்கு பின்னர், லூவ்ரே அருங்காட்சியகம் அதன் மிக விலையுயர்ந்த நகைகளில் சிலவற்றை பிரான்ஸ் வங்கிக்கு மாற்றியுள்ளது.
பாதுகாப்பாக இல்லை
கடந்த வாரம் நடந்த துணிச்சலான பகல் கொள்ளைக்குப் பிறகு, புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் பாதுகாப்பாக இல்லை என்பது அம்பலமானது. இந்த நிலையில் தற்போது அருங்காட்சியகத்தின் அப்பல்லோ காட்சியகத்திலிருந்து சில விலைமதிப்பற்ற பொருட்களை வங்கிக்கு மாற்றியுள்ளனர்.

அப்பல்லோ காட்சியகமானது பிரெஞ்சு அரச குடும்பத்து நகைகளைக் காட்சிப்படுத்தும் அரங்கமாகும். வெள்ளிக்கிழமை இரகசிய பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நகைகள் மாற்றப்பட்டது.
பிரான்ஸ் வங்கியானது, நாட்டின் தங்க இருப்புக்களை தரையில் இருந்து 27 மீற்றர் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள சுரங்க அறையில் பெரிய பெட்டகங்களில் சேமித்து பருகிறது.
லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் இந்த வங்கி அமைந்துள்ளது. அக்டோபர் 19 அன்று நடந்த அதிரவைக்கும் கொள்ளையில் லூவ்ரே சேகரிப்பிலிருந்து 102 மில்லியன் டொலர் மதிப்புள்ள எட்டு விலைமதிப்பற்ற பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றனர்.
உலகில் அதிகமாக மக்கள் வந்து செல்லும் அருங்காட்சியகம் உரிய பாதுகாப்பில் இல்லை என்பதும் அம்பலமானது. பட்டப்பகலில், அருங்காட்சியகம் செயல்படும் நேரத்தில் மேல்மாடி ஜன்னலை உடைக்க கிரேன் பயன்படுத்தி, நகைகளை கொள்ளையிட்டு பின்னர் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். இதுவரை இந்த வழக்கில் எவரும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |