கோடீஸ்வரர் குடும்பத்து வாரிசு... ஏழையான லொறி சாரதிக்கு 60 வயதில் தெரிய வந்த உண்மை
ஜப்பானில் லொறி சாரதி ஒருவர் தாம் கோடீஸ்வரர் குடும்பத்து வாரிசு என்பதை தமது 60 வயதில் தெரிய வந்து நீதிமன்றத்தால் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.
ஆறு தசாப்தங்களாக
குறித்த வழக்கில், உண்மையை உணர்ந்த நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக 38 மில்லியன் யென் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. டோக்கியோவின் சுமிடா மாவட்டத்தில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள San-ikukai மருத்துவமனையில் 1953 ஆம் வருடம் பிறந்த இரு குழந்தைகள், தவறுதலாக அவர்கள் பெற்றோரிடம் மாற்றி அளிக்கப்பட்டுள்ளது. ஆறு தசாப்தங்களாக இந்தத் தவறு கண்டறியப்படாமல் இருந்தது, பின்னர் அந்த கோடீஸ்வர குடும்பத்திற்குள் சந்தேகங்கள் எழுந்தன.
இளைய மகன்கள் தங்கள் மூத்த சகோதரனின் நடத்தை மற்றும் தோற்றத்தைப் பற்றி சந்தேகம் கொண்டனர். குறிப்பாக அவர் தங்கள் தந்தையை மோசமாக நடத்தியதுடன், அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
ஆனால், மருத்துவமனையில் ஒரு செவிலியர் சம்பந்தப்பட்ட ஆடைக் குழப்பம் குறித்து அவர்களின் மறைந்த தாய் ஒருமுறை குறிப்பிட்டதை இளைய சகோதரர்கள் நினைவு கூர்ந்த பிறகு சந்தேகங்கள் மேலும் வலுத்தன.
இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டில், அவர்கள் தங்கள் மூத்த சகோதரரால் தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளை சேகரித்து, அவரது டி.என்.ஏ பரிசோதனை செய்தனர். தங்களின் மூத்த சகோதரர் உடன் பிறந்தவர் அல்ல என்பதையும் உறுதி செய்தனர்.
வாழ்க்கை பறிக்கப்பட்டு
இதன் பின்னர், உண்மையில் தங்களின் சகோதரர் யார் என்பதை அறிந்துகொள்ள முயற்சி முன்னெடுத்தனர். தங்களின் உண்மையான சகோதரர் ஏழ்மையான சூழ்நிலையில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தால் வளர்க்கப்பட்டதை அறிந்தனர்.
அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரது வளர்ப்புத் தந்தை இறந்துவிட, அவர் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு வீட்டில் வளர்ந்துள்ளார். ஆனால், வசதியான குடும்பத்தில் வளர்ந்தவர், போதுமான கல்வி பெற்று, தமது சகோதரர்களுக்கு ஈடாக நிறுவனம் ஒன்றையும் நடத்தி செழிப்புடன் வாழ்ந்து வந்தார்.
மருத்துவமனையில் தவறு நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக இருவரின் தாய்மார்களும் உயிருடன் இல்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Masatoshi Miyasaka, தற்போது ஏழ்மை நிலையில் லொறி சாரதியாக பணியாறும் நபருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளார்.
அவருக்குக் கிடைக்க வேண்டிய வாழ்க்கை பறிக்கப்பட்டுவிட்டதாகவும், அவரது உண்மையான பெற்றோரைச் சந்திக்க ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |