பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை: நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை
பிரான்சிலுள்ள பிரபல அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அருங்காட்சிய நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை
சமீபத்தில், பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்நிலையில், அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக CCTV கமெராக்களைப் பொருத்துவது முதலான 20 நடவடிக்கைகளை எடுக்க அருங்காட்சிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Abdul Saboor, Reuters
அவ்வகையில், அடுத்த சில வாரங்களுக்குள் அருங்காட்சியகத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைவதைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்பட இருப்பதாக அருங்காட்சியக இயக்குநரான லாரன்ஸ் (Laurence des Cars) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள், சுமார் 100 CCTV கமெராக்களை அருங்காட்சியகத்தில் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |