மனைவியிடம் சிக்கிய காதலர்கள்! 10 வது மாடியின் பால்கனியில் தொங்கிய இளம்பெண்: வீடியோ
சீனாவில் காதலனின் மனைவியிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க 10 வது மாடியின் பால்கனியில் காதலி சாகசம் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மனைவியிடம் சிக்கிய காதலர்கள்
சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில் ஆண் ஒருவர் திருமணத்திற்கு மீறிய காதல் உறவில் இருந்துள்ளார்.
HEART-STOPPING moment mistress nearly falls to her DEATH from 10th floor in China
— RT (@RT_com) December 8, 2025
Hiding from lover’s wife, she bangs on neighbor’s windows while CLINGING for dear life pic.twitter.com/Fzx2iVdpKh
இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்ட நிலையில், சம்பவத்தன்று காதலி காதலனின் வீட்டிற்கே வந்து நேரத்தை செலவிட்டுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக காதலனின் மனைவி விரைவாகவே வீடு திரும்ப, பதற்றத்தில் தனது காதலியை 10வது மாடியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டின் வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
பால்கனியில் தொங்கிய இளம்பெண்
காதலனின் மனைவி ஒருவேளை பால்கனிக்கு வந்துவிட்டால் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த காதலி, மேல் பக்க பால்கனியில் இருந்து கீழ் வீட்டில் உள்ள பால்கனிக்கு செல்ல முயற்சித்துள்ளார்.
10 வது மாடியின் குழாய்களை பிடித்தவாறு ஆபத்தான முறையில் கீழே இறங்கிய காதலி ஒரு கட்டத்திற்கு மேல் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.

உடனடியாக கீழ் வீட்டின் ஜன்னல் வழியாக காதலி உதவி கேட்ட, பின்னர் கீழ் வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்து அந்த பெண்ணை பத்திரமாக வீட்டுக்குள் இழுத்துள்ளனர்.
காதலியின் இந்த மிரள வைக்கும் செயலை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து இருப்பதுடன், பல்வேறு விதமான கருத்துக்களை பெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |