காதலிக்கு கிட்னியை தானமாக கொடுத்த காதலன்! ஒரே மாதத்தில் கைவிடப்பட்ட கொடுமை.. நடந்தது என்ன?
மெக்சிகோவில் காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த நபருக்கு ஏற்பட்ட துயரம் குறித்து வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் Baja California மாகாணத்தை சேர்ந்தவர் Uziel Martínez. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் அவர் தனது காதலியின் தாயாருக்கு ஒரு கிட்னியை தானமாக கொடுத்தேன். ஆனால் அதனை சிறிதும் யோசிக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் தன்னுடைய காதலி தனது அம்மாவின் உடல்நிலை குறித்து கவலைக்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரியப்படுத்தினார்.
மேலும் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அவர் மற்றொரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது மன கசப்புக்காக தான் இந்த வீடியோ வெளியிட்டேன்.

தனது காதலி மீது எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது என கூறியுள்ளார். இந்த வீடியோவானது பல லட்ச மக்களின் பார்வையாளர்களை பெற்று வரும் நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        