கொஞ்சம் கூட கொழுப்பே இல்லாமல் எப்படி அல்வா செய்யலாம்...
Weight Loss
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் அல்வா என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் அது இனிப்பாக இருப்பதாலும் உடல் எடை அதிகரித்து விடும் என்ற காரணத்தினாலும் பலரும் அதை சாப்பிட மாட்டார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு எப்படி சரி அல்வா சாப்பிட்டால் போதும் என நினைத்து, பயத்துடன் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடையானது அதிகரித்து விடும்.
எனவே ஒரு பயமும் இல்லாமலும் கொஞ்சம் கூட கொழுப்பே இல்லாமலும் எப்படி இலகுவான முறையில் பூசணியை வைத்து அல்லா செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துருவிய பூசணி - 2 கப்
- துருவிய வெல்லம் - 1/2 கப்
- வறுத்த ரவை - 2 தேக்கரண்டி
- குறைந்த கொழுப்பு பால் - 1/4 கப்
- ஜாதிக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
-
நறுக்கிய பிஸ்தா - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
-
முதலில் பூசணியை தோல்களை நீக்கி துருவி எடுத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் துருவிய பூசணிக்காயை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
- இன்னொரு பாத்திரத்தில் ரவா சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
- பூசணி வதங்கியவுடன், துருவிய வெல்லம் சேர்த்து கிளறவும்.
- அடுத்து ரவை மற்றும் பாலை அதனுடன் சேர்த்து கட்டிகள் வராமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
-
இறுதியாக ஜாதிக்காய் மற்றும் பிஸ்தா சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி பறிமாறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US