குறைந்த முதலீட்டில் சூப்பரான பிஸினஸ் ஐடியா! மாதம் ரூ.65,000 வருமானம்
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறக்கூடிய சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிறந்த தொழில்
தற்போதைய சூழலில் ஒரு நிறுவனத்திற்கு சென்று வேலை செய்வதற்கு பதிலாக சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று தான் இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள்.
அந்தவகையில், சிறிய முதலீட்டில் அதிக வருமானம் தரும் செல்லோடேப் அல்லது ஒட்டக்கூடிய டேப் செய்வது ஒரு சிறந்த தொழிலாகும். செல்லோடேப்பை நாம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வீடுகள், ஹோட்டல்கள், பள்ளிகள், போக்குவரத்து பார்சல் அனுப்பும் இடங்கள் உள்பட பல இடங்களில் செல்லோடேப் பயன்படுத்தப்படுகிறது.
செல்லோடேப்பின் வகைகள்
இந்தியாவில் செல்லோடேப்புக்கான மார்க்கெட் அதிகளவில் உள்ளது. பேக்கேஜிங், கன்ஸ்ட்ரக்ஷன், ஆட்டோமோடிவ் இண்ட்ஸ்ட்ரீஸ்களில் செல்லோடேப்பின் தேவை அதிகளவில் உள்ளதால் அதிக லாபம் தருகிறது.
இந்த செல்லோடேப்பில் பல வகைகள் உள்ளன. அவை, டிரான்ஸ்பாரன்ட் டேப், மாஸ்கிங் டேப், எலக்ட்ரிக் டேப், பாப் டேப், சிங்கிள் சைடு கோட்டடு பேப்ரிக், புரடக்ஷன் டேப், லேபிளிங் டேப் ஆகும்.
எவையெல்லாம் தேவை?
இந்த செல்லோடேப் தயாரிக்கும் தொழிலுக்கு டேப் மற்றும் கோரை வெட்டும் இயந்திரம் தேவைப்படும். இதற்கு 1 லட்ச ரூபாய் தேவைப்படும்.
மேலும், இயந்திரத்தின் விலையை பொறுத்து பெட்டிகள் தயாரிக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
மேலும், நாம் நேரடியாக வாடிக்கையாளரிடம் செல்லோடேப்பை விற்கும் போது அதனுடைய விலை 5 முதல் 8 ரூபாய் வரை இருக்கும். ரிடைல் கடைகள் மூலம் சிறிய டேப்கள் நேரடியாக மக்களை சென்றடையும்.
15 பாக்ஸ்கள் செல்லோ டேப் உற்பத்தி செய்தால் ஒரு பாக்ஸ்க்கு ரூ.150 லாபம் கிடைக்கும். அப்படியானால், மாதத்திற்கு ரூ.65,000 லாபம் கிடைக்கும். இதற்கிடையில், நீங்கள் ஹோட்டல்களில் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றால் அதிக வருமானம் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |