வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி.., சென்னைக்கு வருவது எப்போது?
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும்.
மேலும், அதன் பின்னர் ஓமன் நோக்கிச் சென்று வலு குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து உள்ளது.
எனினும், சிறிது சிறிதாக சென்னை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி நகரலாம் என்பதால், இன்றை போலவே நாளையும் மிக கனமழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |