உருவான புதிய காற்றழுத்த பகுதி.., இந்திய வானிலை மையம் விடுத்த அடுத்த எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய அதே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகவும், முதல் நாளிலியே அது தீவிரமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய அதே சமயத்தில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலவி வருகிறது.
இது, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24 மணிநேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்கிறது.
பின் வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர கடற்கரை பகுதி, ராயலசீமா, மற்றும் கேரளாவில் அதிகனமழை வரை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |