வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்ககடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையும் என்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
குறிப்பாக கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
இதேபோல், நெல்லை, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |